Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 10, 2016

காலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதியஆய்வுக்குழு மீது அதிருப்தி : முதல்வருக்கு ஆசிரியர்கள் மனு.

காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரியில் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டது. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்என, முதல்வர் ஜெ., உறுதிமொழி அளித்ததால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆய்வு குழு அமைப்பு : கடந்த பிப்.,28ல் அரசு அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையில் 6 பேர் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் ஜூன் 30 வரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, முதல்வர் ஜெ., உத்தரவிட்டிருந்தார்.ஆனால், ஜூலை 10 ஆன பின்பும் இதுவரை அறிக்கை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய தர வரிசை எண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது: முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்யும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க 4 மாத காலம் அவகாசம் வழங்கினார். ஆனால், காலம் முடிந்த நிலையிலும் அந்த ஆய்வுக்குழு அறிக்கை அளிக்க வில்லை. எனவே உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

2 comments :

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி