Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 4, 2016

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி.

நாகர்கோவிலில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் (ஜாலி பொனிடிக்) பயிற்சி அளிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாலி பொனிடிக் பயிற்சி அளிக்கப்பட்டது.

 இதற்காக அகஸ்தீசுவரம் வட்டார வளமையத்திற்கு உள்பட்ட 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்று மற்றும் 2 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கும், ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் டாக்டர் கோமதி  பயிற்சியளித்தார்.2 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சியை அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தொடங்கி வைத்துப் பேசுகையில், ஆங்கில மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் அதன் சரியான உச்சரிப்பை ஆசிரியர்கள் இப்பயிற்சியின் மூலம் தெரிந்து கொண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர் என்றார் அவர்.  அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் வில்வம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி