Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 28, 2016

நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
இந்தப் பணிக்கு முதுகலை பட்ட தாரிகள் (எம்ஏ, எம்எஸ்சி) விண்ணப் பிக்கலாம். பிளஸ் 2 முடித்தவுடன் நேரடியாக ஒருங்கிணைந்த5 ஆண்டு முதுகலை படிப்பு படித்தவர்களும் விண்ணப் பிக்கத் தகுதியுடையவர் ஆவர். கடந்த 2015 அல்லது 2016-ம் ஆண்டு படித்து முடித்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் புதுச்சேரியில் பணிசெய்ய தயாரானவர்களாகவும் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஜூலை 30-ம் தேதி காலை 9 மணி, 11 மணி மற்றும் மதியம் 1 மணிக்குநடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதோடு கூடுதல் சலுகைகளும் உண்டு. விண்ணப்பங்களை campus@azimpremjifoundation.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.azimpremjifoundation.org/campus என்ற இணை யதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி