Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 11, 2016

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது:

கடந்த ஆண்டு கூட்டத்தில், தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டது. தமிழகத்தில், தேர்ட்சியளவில் சேலம் மாவட்டம், 19-வது இடத்தில் உள்ளது.தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை, ஆசிரியர்கள் யாரும் பின்பற்றவில்லை. அன்பாக கூறி கேட்கவில்லை என்பதால், அடுத்து நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.

உங்களிடம் வரும் மாணவனை, 100 சதவீத மதிப்பெண் எடுக்ககட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதை கூட நிறைவேற்ற முடியவில்லை. அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக, ஆல் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால்,ஆசிரியர்கள் மாணவர்கள் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி என்று விட்டு விட்டனர்.ஆல் பாஸ் என்பதற்க்காக ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் என கூறவில்லை. இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, மெமோ வழங்கப்படும்.அதேபோல, பள்ளியிலுள்ள வகுப்பறையை ஆர்வத்துடன் சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும். அதேபோல், தன் அறையில் அமர்ந்திருப்பது மட்டும் தலைமை ஆசிரியர் பணியல்ல. காலை இரு வகுப்புகள், மாலை இரு வகுப்புகளை கண்காணித்து, அந்த ஆசிரியர் நடத்தும் கற்பித்தல் முறையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையில் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

18 comments :

 1. supreme court case hearing date..?

  ReplyDelete
 2. வணக்கம் ஜெயகவிதாபாரதி மேடம் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் எப்போது ?ஏன் மேடம் அமைதிய இருக்கிங்க 2013 90+...நமக்கு விடிவு காலம் எப்போது?

  ReplyDelete
  Replies
  1. Y ? Antha ponpala mattum than tet pass panni vaichi irrukka , nee pass pannalaya ? Avalaiyae nontitu irruka ?

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 3. ungaloda badil kaga kathu kondu denamum karumpalakai parkindrom anal ematram than engaluku..

  ReplyDelete
 4. amam venkat sir case eppa mudiyum ivanga eppa posting poduvangalo theriyala yallma kalviya iruku

  ReplyDelete
 5. caseyum hearing varala govementum entha pathilum sollala

  ReplyDelete
 6. last varai tet certicate than expiry aguma

  ReplyDelete
 7. Sir lab result eppa tan poduvanga pls tell

  ReplyDelete
 8. அய்யா 5ம் மற்றும் 8ம் வகுப்பு வேறு பள்ளியில் பயின்று 6 மற்றும் 9ம் வகுப்பிலே சேரும் போது வாசிக்க தெரியவில்லை எனில் எந்த ஆசிரியருக்கு தண்டனை அளிப்பது ?

  ReplyDelete
 9. அய்யா முதலில்1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதை முதலில் மாற்றுங்கள் ,அப்பாவி ஆசிரியரை குறை கூறுவதை கல்வி துறை தயவு கூர்ந்து நிறுத்தவேண்டும் ,அனைத்து ஆசிரியரும் திறமையானவர்கள்தான் .என்பதை நினைவிலே நிறுத்த வேண்டும்

  ReplyDelete
 10. Good Sir, But
  Govt school Disadvantages list blow
  1.Good Experienced teachers but no implement
  2. Good buildings but no maintenance
  3. Free Books but No teacher implement
  4. free Laptop but no computer science course and no knowledge computer science Teachers (very important)
  5. Good Govt employee working Govt sector but our child no study govt school
  6. Need for Govt job but studying private sector
  note: Need to change otherwise automatic improve the Tamil Nadu(National and Inter National Level)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி