Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 9, 2016

மாறுதல் கலந்தாய்வு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில்,பொதுமாறுதல் கலந்தாய்வு,விரைவில் நடத்தக் கோரி,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்,உதவி தொடக்க கல்வி அலுவலகம்,முன்பு நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும்,இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு,ஆண்டுதோறும்,மே மாதம் நடத்துவது வழக்கம். சட்டசபை தேர்தல் காரணமாக,நடப்பாண்டில் மே மாதம்,கலந்தாய்வு நடக்கவில்லை. பள்ளி துவங்கி,ஒரு மாதத்துக்கு மேலாகியும்,கலந்தாய்வு நடத்தும் தேதி குறித்த அறிவிப்பை,பள்ளி கல்வித்துறை வெளியிடவில்லை.இதனால்,காலிப்பணியிடம் உள்ள பள்ளிகளில்,மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இதை கண்டித்து,கோவை முழுவதும் உள்ள, 12உதவித்தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை,நேற்று நடத்தினர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் கருப்புசாமி கூறுகையில்,தமிழகம் முழுவதும், 350உதவித்தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன்,கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை பொறுத்து,காலிப்பணியிடம் மாறுபடும். எனவே,காலிப்பணியிடம் வெளியிடும் போது,எவ்வித ஒளிவுமறைவும்இருக்கக் கூடாது. விரைவில்,கலந்தாய்வு நடக்கும் தேதியை,அரசு வெளியிட வேண்டும்,என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி