Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 3, 2016

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு,விண்ணப்பம் வரவேற்பு.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, தகுதியானவர்கள், ஜூலை, 31க்குள்விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி வழிக் கல்விக்கு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களைஅறிவித்துள்ளது.

கணினி வழிக் கல்வியில் புதுமையை புகுத்துவோரை ஊக்குவிக்க, மத்திய அரசு விருது வழங்குகிறது. 'கடந்த கல்வி ஆண்டுக்கான, சிறந்த தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, ஜூலை, 31க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளி, இந்தோ - திபெத்தியன் பள்ளி உட்பட, மத்திய அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த தகவல்களை, http://cbseacademic.in இணையதளத்தில் அறியலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி