Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 18, 2016

மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த, மருத்துவ படிப்புக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, சென்னையில், ஜூன், 21 முதல், 25ம் தேதி வரை நடந்தது.

இதில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. அரசு பல் மருத்துவ கல்லுாரியில், 85 இடங்களில், 78 இடங்கள் நிரம்பின.மீதமுள்ள, ஏழு இடங்கள், சுய நிதி கல்லுாரிகளில், 72 எம்.பி.பி.எஸ்., 970 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வை, இன்று நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் தீர்மானித்து இருந்தது. திடீரென அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ படிப்புக்கான தேசிய பொது நுழைவு தேர்வான, 'நீட்' ஜூலை, 24ல் நடக்க உள்ளது. அதன் முடிவுகள்,ஆக., 12ல் வெளியானபின், அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடக்கும்.

அதில் நிரம்பாத இடங்கள், மாநிலத்திற்கு திரும்பும். அந்த இடங்கள், ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் சேராத இடங்களையும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்.இதுபற்றிய அறிவிப்பு, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும். ஆக., இறுதியில் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி