Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 14, 2016

பணப்பலன் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் அவதி.

சங்ககிரி ஒன்றியத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்காததால், உரிய நேரத்தில், பணப்பலன் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.
பத்தாண்டுகள், தொடர்ச்சியாக பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை அந்தஸ்து, அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி, சங்ககிரி ஒன்றியத்தில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றிய, 33 இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஜூன், 1ம் தேதி தேர்வு நிலைக்கான உத்தரவு வழங்கி இருக்க வேண்டும். இதுகுறித்து, சங்ககிரி இடைநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம்காட்டி இழுத்தடிப்பு செய்கின்றனர். மேலும், தயாரான உத்தரவு கோப்புகளில், கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்துகின்றனர்.

அதனால், தங்களுக்கு கிடைக்கவேண்டிய பணப்பலன்கள், உரிய காலத்தில் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி