Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 21, 2016

ஐகோர்ட் நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி : டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு.

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி உட்பட, 309 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு, ஆக., 28ல் நடக்க உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதன்படி, நீதிபதிகளுக்கு, 76 தனி உதவியாளர்; பதிவாளருக்கு, ஏழு தனி உதவியாளர்; துணை பதிவாளருக்கு, ஒரு தனி உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களை தவிர, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் 61; தட்டச்சர்கள்84; ஆய்வாளர் 80; காசாளர் இரண்டு; ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் ஆறு என, மொத்தம், 317 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கு, http:/www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் 'ஆன்லைனில்' ஆக., 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை ஆக., 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். உதவியாளர் தேர்வு ஆக., 27லிலும்; மற்ற பதவிகளுக்குஆக., 28ல் நடக்கும். தேர்வு குறித்த தகவல்களை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி