Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 29, 2016

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரை களின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருப்பதால் பத்திரப் பதிவே நடப்பதில்லை. எனவே, இதை குறைக்க வேண்டும்’’ என்றார்.இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘பத்திரப் பதிவுக் கான வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெயல லிதாவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஏற்று பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரைகளின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும்’’ என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி