Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 5, 2016

குழந்தை தொழிலாளரை சாதனையாளராக மாற்றும்: சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் - மாற்றுப்பணி வழங்குமா அரசு?

குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகள் கண்ட றியப்பட்டு, அங்கு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் (என்சிஎல்பி) கீழ் கடந்த 1988 முதல் சிறப்பு பள்ளிகள் நடத்தப் படுகின்றன. குழந்தை தொழி லாளர்களாக இருந்து மீட்கப்பட்ட9 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு இங்கு கல்வி கற்றுத்தரப் படுகிறது.

மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், தூத் துக்குடி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப் பட்ட பலர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் சிறப்பு பள்ளிகளின் ஆசிரியர்கள். ஆனால், அவர்களில் பலர் மாதந்தோறும் சரிவர ஊதியம் கிடைக்காமல் வறுமையில் வாடு கின்றனர். மேலும், சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில் சுமார் 1,000 ஆசிரியர் களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி யாகியுள்ளது.

இதுகுறித்து தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி ஆசிரியர், ஊழியர் சங்க மாநிலச் செயலர் எஸ்.அழகுஜோதி, கூறியதாவது:திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் பட்டாசு, தீப்பெட்டிதொழிற் சாலைகள், கல் குவாரிகள், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றில் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை மீட்டு பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அந்த மாணவர்கள் அதிகபட்சம் 8-ம் வகுப்பு வரை எங்களிடம் பயின்றாலும், கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம். அவர்களில் பலர் நல்ல நிலைக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கு இது வரை எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

ரூ.6 ஆயிரம்தான் சம்பளம்

கடந்த 20 ஆண்டுகளாக பணி யாற்றினாலும், ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றும் எங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர் சட்டப்படி, குறைந்தபட்ச சம்பளம்கூட எங்களுக்கு இல்லை. அதுகூட மாதாமாதம் ஒழுங்காக கிடைப்பதில்லை. தாமதமாகவே கிடைக்கிறது.

சிறப்பு பள்ளிகளில் கடந்த ஆண்டு வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற னர். தற்போது பல்வேறு நட வடிக்கைகளால் குழந்தை தொழி லாளர் எண்ணிக்கை குறைந் துள்ளது. இதனால், குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக் கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசி ரியர்களை ஏற்கெனவே வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.மற்ற சிறப்பு பள்ளிகள் எப்போது மூடப்படும் என்று தெரி யாத நிலையில், சுமார் 1,000 ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எங்களது கல்வி, சேவையை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசு எங்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment :

  1. GROUP-IV-தினசரி தேர்வு-3(05-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி