Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 26, 2016

இந்திய மருத்துவத்தில் மருந்தாளுனர் படிப்பு: எம்.டி., யோகாவுக்கும் விண்ணப்பம்

இந்திய மருத்துவப் படிப்புகளில், இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர், 'நர்சிங் தெரபிஸ்ட்' படிப்புகளுக்கு, விண்ணப்ப வினியோகம் துவங்கிஉள்ளது.
சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லுாரி களில், இந்திய மருத்துவ முறையில்,ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபிஸ்ட் படிப்புகளுக்கு, 200 இடங் கள் உள்ளன.இதற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம், நாகர்கோவில் ஆகிய, இந்திய மருத்துவக் கல்லுாரிகளில், நேற்று துவங்கியது.சென்னை, சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லுாரி யில், எம்.டி., படிப்பில், யோகா, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு, தலா, ஐந்து இடங்கள் என, 15இடங்கள் உள்ளன. இதற்கு, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.

ஆக., 12 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்; அன்று மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி