Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 12, 2016

NEET 2017 | ‘நீட்’ என அழைக்கப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை தமிழ் உட்பட மாநில மொழிகளிலும்அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

தமிழ் உட்பட மாநில மொழிகளில் ‘நீட்’ தேர்வு அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டம்

‘நீட்’ என அழைக்கப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை தமிழ் உட்பட மாநில மொழிகளிலும் அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு மாநிலங்க ளுக்கு மத்திய சுகாதார அமைச் சகம் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தமிழ கம் உள்ளிட்ட சில மாநிலங் களில் உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. இதை யடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ‘நீட்’ தேர்வை தங்கள் மாநிலமொழியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன. ‘நீட்’ தேர்வு இந்த ஆண்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் நடைபெறுகிறது. இதில் மாற்றம் செய்து அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளில் ‘நீட்’ தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து  சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது “கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து மாநிலங் களிலும் எந்தெந்த மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது எனக் கேட்டு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி யுள்ளோம். இதில் கடந்த 3 ஆண்டு களில் அங்கு நடந்த தேர்வின் அடிப்படையில், மாநிலமொழி களில் அடுத்த ஆண்டு முதல் தேர்வு நடத்தப்படும். எனினும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில், நாட்டின் அனைத்து மாநில மொழிகளிலும் ‘நீட்’ தேர்வு நடத்துவது சிரமம். இதில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிடும் அபாயமும் உள்ளன. எனவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, அசாமி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தலாம் என கூட்டத் தில் ஆலோசனை எழுந்தது. இதன்படியே, அடுத்த ஆண்டு தேர்வுகள் நடக்கும் என எதிர்பார்க் கிறோம்” என்று தெரிவித்தன. தமிழகத்தில் மருத்துவப் படிப் புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த 2006-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கு முன் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு நடந்தது.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் தமிழ் மொழியிலும் ‘நீட்’ தேர்வு நடத்த சிறப்பு அனுமதி கிடைக்கும் வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சகத்தினர் கூறுகின்றனர். வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ள ‘நீட்-2’ தேர்வை நாடு முழுவதிலும் சுமார் 4.75 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதன் முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அனைத்து மாநில மொழிகளிலும் ‘நீட்’ தேர்வு நடத்துவது சிரமம். இதில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிடும் அபாயமும் உள்ளன. எனவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, அசாமி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தலாம் என கூட்டத்தில் ஆலோசனை எழுந்தது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி