Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 4, 2016

TET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை!

மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.கேந்திரீய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதேபோல்குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள பள்ளிகள் எனில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர் விலும் (டெட்) தேர்ச்சி பெற வேண் டும்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறை ஆகும். தமிழகத்தில் முதலாவது தகுதித் தேர்வு 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப் பட்டது. அந்த தேர்வில் நேரக் குறைவு காரணமாக தேர்ச்சி பெற்ற வர்களின்எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் துணைத் தேர் வாக இன்னொரு தேர்வு நடத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு தேர்வு என மொத்தம் 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான தகுதித் தேர்வுகள் என்று பார்த்தால் இதுவரையில் 3 தகுதித் தேர்வுகளே நடத்தப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் மத்திய அரசு சார்பில் சி-டெட் தகுதித் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ அமைப்பு என்சிடிஇ விதிமுறையின்படி திட்ட மிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, செப்டம்பர்) தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை யில் 9 சி-டெட் தேர்வுகள் நடத்தப் பட்டுள்ளன. 10-வது சி-டெட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 18-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2 தடவைஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படா மல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தகுதித் தேர்வு மதிப் பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆசிரியர் படிப்பு மதிப்பெண் (வெயிட்டேஜ் மார்க் முறை) அடிப்படையில் நடைபெறுகின்றன. தகுதித் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது. எனினும் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை அதிகப் படுத்த விரும்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிவிடு கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படாததால் இந்த 3 ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்களால் தகுதித் தேர்வை எழுத முடியவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

 தகுதித் தேர்வு நடத்தப்படாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தகுதித் தேர்வு தேர்ச்சியில்இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை ஆகியவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்ததும் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5% மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிந்ததும் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

56 comments :

  1. இப்பவே கண்ணகட்டுதே..

    ReplyDelete
  2. Please tell anyone what is the tet case details its comes to end?

    ReplyDelete
  3. Please tell anyone what is the tet case details its comes to end?

    ReplyDelete
  4. What is the real position in tet case any possibility to conduct tet exam in this year

    ReplyDelete
  5. What is the real position in tet case any possibility to conduct tet exam in this year

    ReplyDelete
  6. Goodmorning Admin., Ramzan 6th or 7th please refer govt. Holyday

    ReplyDelete
  7. Goodmorning Admin., Ramzan 6th or 7th please refer govt. Holyday

    ReplyDelete
    Replies
    1. inga velaiye kidaikalanu feel panranga... but namma thala mani.ku ramzan ennaiku?nu oru doubt.... varenvaaaaa.... super boss...

      Delete
  8. thanks to Hindu....for article about tet...it may attract attention of govt

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. thank u for 'the hindu' innum 4 aandukal vazhakkai nittithal... vazhakkai thotaravendiya avasiyam irukkathu ila...

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Enlighten Pg trb English coaching center place Idappadi, Salem contact 9688539099 study materials available

    ReplyDelete
  14. Enlighten Pg trb English coaching center place Idappadi, Salem contact 9688539099 study materials available

    ReplyDelete
  15. Lab result eppa tan poduveenga...we feel very sad about this...pls put a case against this matter.

    ReplyDelete
    Replies
    1. case poda vendiya avasiyam illa. 07.08.2015 annaike exam marks prefer panna solli judgement vandhachu. ipa posting pota kilai, vattam, onriyam maatum.nu bayam than kaaranam....

      Delete
    2. bala sir, neenga lab asst aanaathan solution thayarika mudiyum. KMnO4, Acitic acid Solution....

      Delete
  16. GROUP-IV-தினசரி தேர்வு-2(04-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  17. GROUP-IV-தினசரி தேர்வு-2(04-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  18. GROUP-IV-தினசரி தேர்வு-2(04-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  19. Govt has to take immediate steps to conclude tet case at Supreme Court

    Raman

    ReplyDelete
  20. The inordinate delay only because of the TN Govt's attitude towards Govt School Education and their pupil.

    ReplyDelete
  21. The teacher's and pupil to wait one more five years .....

    Raman

    ReplyDelete
  22. DON'T EXPECT FRIENDS, THE RULING GOVT TOTALLY WASTE....

    ReplyDelete
  23. This government is not showing interest to finish the tet case .... government is spoiling the school education.........

    ReplyDelete
  24. I got 90 above marks in TET but no job my family is very poor. Anybody knew about TET case means plz....'reply

    ReplyDelete
  25. Teachers ku exam nadathum intha arasangam arasilvathiku exam illa .padechavanga kaikatti sambalam vanguranga padekathavanga sambalam kodukiranga

    ReplyDelete
  26. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதுபோல், TET case யார் எதற்காக போட்டார்கள் என்பது நமக்கு நன்றாக தெரிந்தே.Then how can we blame Govt. அரசை குறை கூறுவது நியாயமாகுமா?சற்று சிந்தியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Arasai yarum kurai koora villai. Certificate verification mudinthu order kodukkum samayathil relaxation endru kulappam aerpaduthiyathu yar.....

      Delete
    2. Matra state la ellam 90kum kuraivaana mathippengalaiye therchiyaga nirnayathirukirathu athu pol tamilnadulaiyum amal padutha vendum endru solliya athanai arasiyal katchikalayum maranthu viteergala?

      Delete
  27. அரசின் மீதே அடுக்அடுக்காக வழக்குகளை பதிவு செய்து விட்டு பின் அரசின் மீதே குறைகூறுகிறேம். வழக்குகளை பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்; நாம் தாக்கல் செய்த வழக்குகளை எல்லாம் வாபஸ் பெறாமல் TET என்ற பேச்சுக்கே இடமில்லையன்று

    ReplyDelete
  28. Are they ready to withdraw all TET cases against Govt? No other TET proceedings will be done with out court judgement. So we should Wait for hble judgement guidelines

    ReplyDelete
  29. Are they ready to withdraw all TET cases against Govt? No other TET proceedings will be done with out court judgement. So we should Wait for hble judgement guidelines

    ReplyDelete
  30. அரசின் மீதே அடுக்அடுக்காக வழக்குகளை பதிவு செய்து விட்டு பின் அரசின் மீதே குறைகூறுகிறேம். வழக்குகளை பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்; நாம் தாக்கல் செய்த வழக்குகளை எல்லாம் வாபஸ் பெறாமல் TET என்ற பேச்சுக்கே இடமில்லையன்று

    ReplyDelete
  31. What about tet case everybody says

    ReplyDelete
  32. 90 ku yeduthu pass akium velai kidaikama irukira yenfalykuthan thrium athoda vethanai nenga paduku case pidavangala kurai solathinga

    ReplyDelete
    Replies
    1. Sari case pottu enna payan Kidaichathu namakku?

      Delete
    2. Anybody plz tell about tet case.I'm suffered a lot for my daily needs.I got 90 above marks in tet.my parents also very aged.they felt very sad .

      Delete
  33. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram.. Contact 9524563655

    ReplyDelete
  34. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram.. Contact 9524563655

    ReplyDelete
  35. இந்திய அரசின் கட்டாயக் கல்விச்சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வினை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher's eligibility Test) நடத்தாமல் இருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. மத்திய அரசு உத்தரவின்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் இப்படி மூன்று வருடங்களுக்கு மேல் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வை இருள் சூழ வைத்துள்ளது.

    குறிப்பாக அதிமுக ஆட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பட்டப் படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வை எழுத முடியாமல் தவிக்கிறார்கள். ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கழக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, 2016 வரை இந்த தகுதி தேர்வை எழுத வழங்கப்பட்ட கால அவகாசமும் 1665 ஆசிரியர்களுக்கு நிறைவடையும் சூழ்நிலையில், மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது பற்றி எந்த வித அறிவிப்பையும் அதிமுக அரசு வெளியிடாமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. இதனால் ஆசிரியர் பணியில் புதிதாக சேர விரும்புவோரும், ஏற்கனவே ஆசிரியர் பணியில் சேர்ந்து இந்த தேர்வை எழுத முடியாத காரணத்தால் மருத்துவ விடுப்பு, ஊக்கத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாதவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்வை நடத்த முடியவில்லை என்று மத்திய அரசுக்கு கல்வித்துறை செயலாளர் பதில் சொல்லியிருந்தாலும், அந்த வழக்கை துரிதப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள், ஆசிரியர் பணியில் இருப்போரின் பணிப் பிரச்சினைகளை உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்து வைத்து அந்த வழக்கை விரைந்து விசாரிக்க ஏன் முயற்சி செய்யவில்லை? மூன்று வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை உரிய காலத்தில் நடத்துவதற்கு ஏன் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆசிரியர்கள் நலன் மற்றும் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலன் கருதி இனியாவது அதிமுக அரசு விழித்துக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உடனடியாக முறையிட்டு, இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், பள்ளிக்கல்வித்துறையில் 60 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்கள், 100க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அதே அளவிலான மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அத்துடன், ஆசிரியர்களுக்கான இடமாறுதால் தொடர்பான பொதுக் கலந்தாய்வும் ஜூலை மாதமாகியும் நடைபெறவில்லை. இவை அனைத்துமே கல்வித் துறையைப் பாழ்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதனைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.-Mr. Stalin today's speech

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. ஆசிரியர் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்தபடி மாணவர்கள் அதிகளவில் அதில் பங்கேற்காததால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கத்தில் உள்ளன.

    மாநில கல்வியில் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 2016-17 கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தொடங்கியது. வரும் 9ம்தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.

    முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. ஆன்லைன் முறையில் இந்த கலந்தாய்வு நடந்தது.



    தமிழகம் முழுவதும் சுமார் 676 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்பட பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.

    மாநிலம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் 9 ஆயிரம் காலி இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சேர சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்ட அளவில் விண்ணப்பித்தவர்களுக்கு சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நேர்முக தேர்வு நடந்தது. இதில் இரண்டு மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    முனைஞ்சிபட்டி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதல்வர் கோடா முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தமிழக அளவில் முதல் நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் ஓருவர் கூட பங்குபெறவில்லை. முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் யாரும் சேரவிலலை. இதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் பிரிவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை.

    மற்ற பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் பலரும் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கததில் உள்ளன.
    Source : one India tamil

    ReplyDelete
  38. ஆசிரியர் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்தபடி மாணவர்கள் அதிகளவில் அதில் பங்கேற்காததால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கத்தில் உள்ளன.

    மாநில கல்வியில் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 2016-17 கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தொடங்கியது. வரும் 9ம்தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.

    முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. ஆன்லைன் முறையில் இந்த கலந்தாய்வு நடந்தது.



    தமிழகம் முழுவதும் சுமார் 676 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்பட பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.

    மாநிலம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் 9 ஆயிரம் காலி இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சேர சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்ட அளவில் விண்ணப்பித்தவர்களுக்கு சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நேர்முக தேர்வு நடந்தது. இதில் இரண்டு மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    முனைஞ்சிபட்டி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதல்வர் கோடா முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தமிழக அளவில் முதல் நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் ஓருவர் கூட பங்குபெறவில்லை. முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் யாரும் சேரவிலலை. இதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் பிரிவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை.

    மற்ற பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் பலரும் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கததில் உள்ளன.
    Source : one India tamil

    ReplyDelete
  39. mrs puliyankudi sir enka ponaru aalaye kanum

    ReplyDelete
  40. mrs puliyankudi sir enka ponaru aalaye kanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி