sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 10, 2016

TET நிபந்தனை ஆசிரியர்கள் - தமிழக முதலமைச்சருக்கு வேண்டுதல் மடல்:

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின்மேலான பார்வைக்காக...

வணக்கம்.                      
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23.08.2010 க்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும்,சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையாக நியமனம் பெற்று தமிழகம் முழுவதும்பணியாற்றி வரும் சுமார் மூவாயிரம் பட்டதாரி  ஆசிரியர்கள் வாழ்வாதார பாதுகாப்புவேண்டி எழுதும் கடிதம்.

எங்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டுள்ள நிலையை எடுத்துக் காட்டி நல்லதீர்வை வேண்டி இக் கடிதம் எழுதியுள்ளோம். ஆசிரியப் பணி நியமனங்களில் ஆசிரியர்தகுதித் தேர்வு நடைமுறையில் வரும் முன்னர் ஏற்கனவே பல ஆண்டுகளாக அமலில் உள்ளகல்வித் துறையின் உரிய நடைமுறைகளான அரசின் வழிகாட்டுதலுடன் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரிஆசிரியர்களாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பதிவுப்பட்டியல் பெற்றும், நாளிதழ்களில் விளம்பரம், கல்வித் துறையின் அங்கீகாரம்பெற்று பள்ளிக் குழுவின் நேர்முகத் தேர்வு மற்றும் இனச்சுழற்சி முறை போன்றபலவகையான தெரிவு முறைகளில் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறையின் முழுஒப்புதலுடன் பட்டதாரி ஆசிரியப் பணியாற்றி வருகின்றோம்.மாண்புமிகு தமிழக முதல்வராக தாங்கள் ஆட்சி் பொறுப்பு ஏற்ற பின்னர் தான்நிரந்தர ஆசிரியர் பணியிடத்தில் நாங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் சூழலில் இன்று தங்களது ஆட்சிக் காலத்திலேயே எங்கள்பணிக்குஆபத்து உருவாகியுள்ளதை எண்ணி மிகுந்த வேதனையும் மனக் குழப்பமும் அடைந்துள்ளோம்.அம்மா, தற்போதைய நடைமுறையில் எங்களுக்கென புதிதாக பணியிடம் உருவாக்கவோ,சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவோ, சான்றிதழ்கள் சரிபார்க்கவோ வேண்டியதேவை இருக்காது என்பதையும் தங்களது மேலான கவனத்தில் தெரிவிக்கின்றோம்.

பணிப்பாதுகாப்பு இல்லாமல் எங்களில் பலர் இன்று வரை ஊதியம், ஊக்க ஊதியம்,வளரூதியம், தகுதிகாண் பருவம் போன்ற பல பிரச்சனைகளில் நிம்மதியை முழுவதும்தொலைத்து விட்டு பணிபுரியும் சூழல்.கருணை உள்ளத்துடன் விரைவில் ஒரு நல்ல தீர்வு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்மிகவும் மன உளைச்சலை  வெளிக்காட்டாது பணியில் இருக்கின்றோம்.கட்சிக்காக உழைத்தவர்கள், தங்கள் ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர்களின் குடும்ப பிள்ளைகளும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.மேலும் முறையாக தகுதிக்காண் பருவத்தையும் முடித்தும் பல மாதங்கள் ஆகிவிட்டன.பணிப்பாதுகாப்பற்ற மனவேதனையிலும்  ஒரு மன நிறைவான வெற்றியாக நாங்கள் கருதுவது,எங்களிடம் கடந்த ஐந்து வருடங்கள் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்பல்வேறு பாடப் பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றும், சிலர் மாவட்ட,மாநில அளவில் தரம் பெற்றும் உள்ளனர் என்பதன் மூலமாக ஆசிரியப் பணி அறப்பணி என்றஎண்ணத்துடன் எங்களது ஆசிரியர் தகுதியினை ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புஉணர்வுடன் நிலைநிறுத்தி வருகின்றோம்.

இதற்கிடையில், எங்களது நிபந்தனைப் பணிக்காலம் எதிர் வரும் நவம்பரில் முடியும்என்ற நிலையில், ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப்போராட்டத்துடன் நகர்த்திக் கொண்டு இருக்கும் எங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளித்து எங்களின்  குடும்ப வாழ்வாதாரம்பாதுகாக்க உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.தாயுள்ளம் கொண்ட அம்மா,மாண்புமிகு தமிழக முதல் அமைச்சராகிய தாங்கள் மனது வைத்தால் TET நிபந்தனையில்பணியில் உள்ள எங்களுக்கு ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் விடுவிக்க இயலும்.பல மாதங்களாக எங்களது சூழலை எடுத்துக் காட்டி நிறைய நாளிதழ்களிலும், கல்விசார்ந்த இணைய தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.தங்கள் மேலான கவனத்தில் கொண்டு சேர்க்க ஒரு சில ஆசிரியர் சங்கங்களை நாடியும்யாரும் உதவ முன்வரவில்லை.ஆதியும் அந்தமுமான தங்களால் அன்றி எங்களுக்கு யாராலும் முழுமையான தீர்வைத் தரஇயலாது.

நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னைக்கு வந்து தங்கள் அலுவலகத்தில் நேரில்மனு அளிக்க ஒருங்கிணைப்பு செய்யக் கூட எங்களிடம் மனதளவில் தெம்பு இல்லை.TET லிருந்து முழுவதும் விலக்கு தங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை பட்டதாரிஆசிரியர்பணியில் உள்ள  நாங்களும் எங்களது குடும்பங்களும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்,கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் அன்புமிகு அம்மாவாகிய தங்கள் மீதானநம்பிக்கையை விடாமல் நல்ல தீர்வுக்கு காத்திருக்கிறோம்.எங்களைக் காப்பாற்றுங்கள்.இப்படிக்கு,தங்களது உண்மையுள்ள,ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.( அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள்.தமிழகம் )

செய்திவெளியீடு : தென்னகக் கல்விக் குழு,  கோவை.

21 comments :

 1. சார் உங்களை எப்படி தொடர்பு கொள்வது மொபைல் எண் கொடுங்க

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. சார் நம்பர் நான் save பண்ணல please

   Delete
  4. To send my email id nokiamurugan@gmail .com your mobile send

   Delete
 2. 15.11.2011 முன் பணியில் சேர்ந்தவர்கள் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதா சொல்லுங்கள் ஏனெனில் தமிழ்நாட்டில் அப்பொழுதுதான் அரசாணை அமலுக்கு வந்தது

  ReplyDelete
 3. Pitchai eduggalam thavaru onrumillai . Aanal kadavulukae aappu vaithAl nadakkuma nadakkathu .

  ReplyDelete
 4. Mr.Murugan don't be selfish pray for everyone let them keep the exam or cancel the order

  ReplyDelete
 5. No need to write the tet exam that order

  ReplyDelete
 6. No need to write the tet exam that order

  ReplyDelete
  Replies
  1. Madam தமிழ்நாட்டில் இந்த ஆணை வெளிவந்த தேதி 15.11.2011 அன்றுதான் ஆனால் அரசாங்கம் 23.8.2010 முன்தேதியிட்டு எப்படி சொல்லலாம் நீங்களே சொல்லுங்க

   Delete
 7. Mr.Murugan don't be selfish pray for everyone let them keep the exam or cancel the order

  ReplyDelete
 8. Arive illama Aasiriyar aganumnu nenakirathu thappu,so TET is must....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துகள் சரி. மிகவும் நன்றி. உங்களுக்கு இந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக நல்வாழ்த்துகள். (அறிவு????

   Delete
 9. Let them extent your appointment order for 3more years its their mistake not keeping exam why you are bothering actually they have to keep 2exam per year so totally 10 exam they kept only 2 remaining 8 exams are their be spotive you will win

  ReplyDelete
 10. சந்துரு சார் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என் நம்பர் 9952449068 send sms

  ReplyDelete
 11. 👏👏👏👏👏👏👏👏
  பொதுமாறுதல் புதிய விதிமுறைகளை.
  1. முதலில் 1.8.2016 இன்படி surplus
  2. அடுத்து தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை ஓரிடத்தில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த All Hm's. All type of Teachers . Appointment முன்னுரிமை படி list தயார்செய்து கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்படும்.
  3. அதன் பின்னர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்.
  4. இவைகள் 22.8.16 முதல் நடத்தப்படும்.

  ReplyDelete
 12. I don't know whether the above news is true or not.......whatsapp news.....groupla vandhuchu

  ReplyDelete
  Replies
  1. அப்போ தவறான செய்தி ...

   Delete
 13. செல்வக்குமார்.. சார்..! கடினமான வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாமே?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி