Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 10, 2016

TNPSC:அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை.

அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரூப்-1முதன்மை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மை (மெயின்) தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 17-ந் தேதி வெளியிட்டது.

மேலும் நேர்முக தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு தேதிகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மைதேர்வு இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கனவே எழுதிய தேர்வின் நேர்முக தேர்வுக்கு தயாராகுவதா? இல்லை முதன்மை தேர்வுக்கு தயாராகுவதா? என்ற குழப்பத்தை தேர்வு எழுதுபவர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தேர்வுகள் முதன்மை தேர்வினை தள்ளிவைத்து 2014-15-ம் ஆண்டுக்கான நேர்முக தேர்வினை முதலில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை வெளியிடுவதன் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீண்டும் 2015-16-ம் ஆண்டுக்கான தேர்வு எழுதுவதில் இருந்து விலகுவார்கள். இதன் மூலம் முதன் முறையாக முதன்மை தேர்வு எழுதுவோர் பயன்பெறுவார்கள். இம்மாதம் 31-ந் தேதி பாரத ஸ்டேட் வங்கி பணிகளுக்கான முதன்மை தேர்வு, ஆகஸ்டு 7-ந் தேதி நடைபெற உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்முதல் நிலை தேர்வு என அடுத்தடுத்து தேர்வுகள் உள்ளது.

தேர்வு தள்ளிவைக்க வேண்டும் இந்த தேர்வுகளை பெரும்பாலானோர் எழுத உள்ளதால் இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதி நடைபெற உள்ள குருப்-1 முதன்மை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தள்ளிவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இடையே உள்ளது. இதற்கிடையே குரூப்-1 நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது கோரிக்கையுடன் கூடிய மனுவினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சமர்பித்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி