sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 22, 2016

TNPSC-VAO: ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.இந்தப் பணிக்கான எழுத்து தேர்வுக்கான முடிவு ஜூலை 1-இல் வெளியிடப்பட்டது. இதில்,

தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் (www.tnpsc.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேதி-நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவு அஞ்சல், குறுஞ்செய்தி-மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுவிண்ணப்பதாரர்கள் அளித்துள்ள  தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி