Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 27, 2016

TNPSC:சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவது ஏன்? - டிஎன்பிஎஸ்சி செயலாளர் விளக்கம்.

அரசு பணிக்கான தேர்வின் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு காலியிடங்களைவிட கூடுதல் விண்ணப்பதாரர்களை அழைப் பது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜய குமார் விளக்கம் அளித்தார்.தமிழக அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
எழுத்துத்தேர்வை தொடர்ந்து,சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. குரூப்-4 தேர்வில் உள்ளடக்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், குரூப்-2ஏ தேர்வில் இடம்பெறும் பல்வேறு துறைகளுக்கான உதவியாளர் என பல்வேறு விதமான பணி நியமனங்களின்போது சான்றிதழ் சரிபார்ப்பு, கலந் தாய்வுக்கு அறிவிக்கப்பட்ட காலியிடங்களைவிட சற்றுகூடுதலாக விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகின்றனர்.இதனால், விண்ணப்பதா ரர்களுக்கு அனுப்பப்படும் அழைப்புக்கடிதத்திலேயே, ‘‘சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அழைக்கப்படும் விண்ணப் பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களது இடஒதுக் கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும்பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி கூற இயலாது’’ என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்து விடுகிறது.ஆனால், இதை அறியாமல் பலர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவிட்டு, காலியிடம் இல்லை என அறிவிக்கப்படும்போதுஏமாற்றம் அடைகின்றனர். வேலை தராமல் ஏமாற்றிவிட்டார்களோ என்று சந்தேகப்படுகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:பணியின் முக்கியத்து வத்துக்கு ஏற்ப சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு 1.5 அல்லது 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்களை அழைக் கிறோம்.

ஒரு காலியிடத்துக்கு ஒருவர் என்று அழைத்து, அதில் சிலர் வராமல் போனால், பணிநியமன பணிகள் தாமதம் ஆகின்றன. வராதவர் களுக்கு பதிலாக புதிய விண்ணப் பதாரர்களை அழைக்க நேரி டுகிறது. இதனால், ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் விண்ணப்பதாரர்களை அழைக்கிறோம். ‘சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் படுவதாலேயே பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை’ என்று தெளிவாகவும் தெரிவித்து விடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி