Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 11, 2016

அகில இந்திய பணிகள், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம்.

அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு களில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் வி.சரோஜா கூறினார்.சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:
அகில இந்திய பணிகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கிராமங்களில்மிகக் குறைவாக உள்ளன. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட அளவில் சாலை நிகழ்வுகள், தெரு நாடகங்கள் நடத் தப்படும். இதற்காக மாவட்டத் துக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 32 மாவட் டத்துக்கு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் செலவிடப்படும்.தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் உரிமைகளும் வழங்கு வதற்காக அனைத்து மாவட்டங் களிலும் ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் செலவில் வணிக நிறுவனங்களில் உணர்வூட்டும் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், தொண்டு நிறுவனங்களின் உதவியோடு தமிழகத்தில் இயங்கி வரும் 78 ஆரம்பகால பயிற்சி மையங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.8 லட்சம் செலவில் ஒருநாள் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ.12 லட்சம் செலவில் சிறப்பு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி