Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 29, 2016

பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்

மதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வுகள்) அமுதவள்ளி தலைமை வகித்தார்.மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர்கள் ஆதிராமசுப்பு, அனந்தராமன் ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர்.இதில், 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டது. தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 7, ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில் தலா 6 பேர் என 19 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை அறிவியல், கணிதப் பாட ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி