Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 27, 2016

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மே, ஜுன் மாதங்களில் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவன இளங்கலை, முதுகலை படிப்புகள், பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ் படிப்புகள் மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்பு களுக்கான தேர்வுகளின் முடிவுகள் 29-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப் படும்.
தேர்வெழுதிய மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். www.ideunom.ac.in, www.unom.ac.inமறு மதிப்பீட்டுக்கு, உரிய தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 8-ம் தேதி ஆகும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி