Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 21, 2016

அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைப்பு: கு.பாலசுப்பிரமணியன் தகவல்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் 2 சங்கங்கள் இணைய உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தெரிவித்தார்.கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடுஅரசுப் பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் (மு.செ.கணேசன் பிரிவு) ஆகிய 2 சங்கங்களும் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான இணைப்பு விழா வரும் 27-ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.பொதுச் சங்கங்கள் ஒன்றிணைவதால் சங்கங்களின் கோரிக்கைகள் வலுப்பெறும் என்பதால், கொள்கை அடிப்படையில் இந்த இணைப்பு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பு சங்கமான டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வேலை இழக்கும் பணியாளர்களுக்கு அரசுத் துறையில் காலியாக உள்ள இடங்களில் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தாற்காலிமாகபணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம். செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் அதன் இணைப்புச் சங்கங்களும் பங்கேற்கும் என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி