Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 6, 2016

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு டி.வி.டி.யில் முக்கிய பாடங்கள்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முக்கிய பாடங்கள் டி.வி.டி.யாக தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. டி.வி.டி.யில் பாடங்கள் தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதில் ஒரு நடவடிக்கையாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் முக்கிய பாடங்கள் டி.வி.டி.யாக தயாரிக்கப்பட்டு உள்ளது.கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் உள்ள முக்கிய பகுதிகள் டி.வி.டி.யில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ, வீடியோகாட்சிகள் அடங்கிய டி.வி.டி.க்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு பயிற்சி இந்த டி.வி.டி.க்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பள்ளிகளுக்கு இவை அனுப்பப்படுகின்றன. ஆசிரியர்கள் பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டரில் அந்த டி.வி.டி.யை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். இதன்மூலம் மாணவர்களுக்கு அந்த பாடங்கள் நன்றாக மனதில் பதியும்.

இந்த டி.வி.டி.யை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பது தொடர்பாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட அரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதல்கட்டமாக 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அந்த ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியை இதர ஆசிரியர்களுக்கு பகிர்ந்துகொள்வார்கள். இதன்மூலம் அரசுபள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 comments :

  1. 6years old syllabus. 6 year teaching Pandra asiyarukku students puriyavaikka theriyana antha teacher waste

    ReplyDelete
  2. Syllubus old but pasanga mentality and attitude romba romba change aahite pohudu so nama method should be changed

    ReplyDelete
  3. AIDED POST -URGENT
    1. HISTORY (GENERAL -MALE/FEMALE)get above 90
    Contact:8870098794

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி