Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 21, 2016

'டிஜிட்டல்' நூலகத்தில் 30 லட்சம் கட்டுரைகள்

மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய, 'டிஜிட்டல்'நுாலகத்தில், 30 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் உள்ளதாக, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தக ஆவணங்களை சேகரித்து, அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில், மத்திய அரசு சார்பில் டிஜிட்டல் நுாலகம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நுாலகத்தை, கான்பூரில் உள்ள இந்தியஉயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., நிர்வகித்து வருகிறது. தற்போது, இந்த டிஜிட்டல் நுாலகத்தில், ஒரு லட்சம் ஆய்வாளர்களின், 30 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன. இதுபோல், அனைத்து மாநில உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து மற்றவர்கள் பயன்பெறச் செய்யுமாறு, பல்கலை மற்றும் கல்லுாரிகளை, யு.ஜி.சி., கேட்டுக் கொண்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி