Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 31, 2016

அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,செப்., 2ல், நாடு தழுவியவேலைநிறுத்த போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு,குறைந்தபட்சஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து, வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில், அமைச்சகங்கள் இடையிலான குழு, கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி