Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 1, 2016

தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களுக்கு -விதிமுறைகளுக்கு மாறாக வேலை !!!

திருச்சி :தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போலவேலை வாங்கிவருகின்றனர்.
கடந்த, 2012ல் மத்திய அரசின், 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் அடிப்படையில், தமிழகஅரசு பள்ளிகளில் பணியாற்றுவதற்காக கம்யூட்டர், தையல், உடற்பயிற்சி ஆகிய பிரிவுகளுக்கு, 16,546 சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதலில், 5,000 ரூபாயாக இருந்த மாத ஊதியம், பின், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இவர்கள், வாரத்தில் மூன்று, அரை நாட்கள் மட்டும் பணியாற்ற வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. ஆனால், அவர்களை வாரத்தில் மூன்று முழு நாட்களும் பள்ளி தலைமைஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி பணியாற்ற வைக்கின்றனர்.இதுதவிர, பள்ளிக்கான அனைத்து வெளி அலுவல் பணிகளையும் சிறப்பு ஆசிரியர்களையே செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் வழக்கமான பள்ளி ஆசிரியர்களுக்காக, கல்வித்துறை நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு, பள்ளியில் இருந்து சென்றதாக ஆள் கணக்கு காட்டவும், சிறப்பு ஆசிரியர்கள்அனுப்பப்படுகின்றனர். பள்ளிக்கு புத்தகம் வாங்குவது, சீருடைகள் வாங்குவது என மற்ற பணிகளுக்கும் சிறப்பு ஆசிரியர்களே அனுப்பப்படுகின்றனர். இதற்காக, அவர்களுக்கு தனியாக போக்குவரத்து படி ஏதும் கொடுக்கப்படுவதில்லை.

தமிழக அரசு, தங்களை என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில், தலைமை ஆசிரியர்கள், தங்களை கொத்தடிமை போல் வேலை வாங்குவதை சகித்து கொண்டுபணியாற்றி வருகின்றனர். ஆகவே, அரசு விதிகளின்படி வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் தங்களுக்கு பணிவழங்க, கல்வித்துறை கண்டிப்பாக உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என, அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

7 comments :

  1. என்று தணியும் இந்த சுதந்திர தாகம். அம்மா அவர்களே, எங்களுக்கு வாழ்க்கை தரமாட்டிர்கலா?

    ReplyDelete
  2. என்று தணியும் இந்த சுதந்திர தாகம். அம்மா அவர்களே, எங்களுக்கு வாழ்க்கை தரமாட்டிர்கலா?

    ReplyDelete
  3. வெறும் 7000 சம்பளத்தை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும். கொஞ்சம் இந்த காலத்தில் உள்ள வரவு செலவை கொஞ்சம் நினைத்து பாருங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள், கொஞ்சம் தரிசனம் தாருங்கள்.

    ReplyDelete
  4. வெறும் 7000 சம்பளத்தை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும். கொஞ்சம் இந்த காலத்தில் உள்ள வரவு செலவை கொஞ்சம் நினைத்து பாருங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள், கொஞ்சம் தரிசனம் தாருங்கள்.

    ReplyDelete
  5. உங்களை குறை சொல்ல விரும்பவில்லை ஆனால், எங்கள் வாழ்வாதாரத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள். நாங்கள் வறுமையின் காரணமாக 7000 ரூபாய் சம்பளத்தில் இருப்பது குற்றமா? நீங்கள் நிரந்தரம் செய்வீர்கள் என்று நம்பீக்கையுடன் கடந்த 5 கல்வி ஆண்டுகளாக காத்திருக்கிறோம். கொஞ்சம் தயவு கூறுங்கள்.

    ReplyDelete
  6. உங்களை குறை சொல்ல விரும்பவில்லை ஆனால், எங்கள் வாழ்வாதாரத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள். நாங்கள் வறுமையின் காரணமாக 7000 ரூபாய் சம்பளத்தில் இருப்பது குற்றமா? நீங்கள் நிரந்தரம் செய்வீர்கள் என்று நம்பீக்கையுடன் கடந்த 5 கல்வி ஆண்டுகளாக காத்திருக்கிறோம். கொஞ்சம் தயவு கூறுங்கள்.

    ReplyDelete
  7. Wat about tet case? Any information tel me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி