Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 12, 2016

வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஊரக தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் ஊரகத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வியாழக்கிழமை பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், உற்பத்தித் தொழில்களுக்கான அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். சிட்கோ தொழிற்பேட்டையில் ஒதுக்கீட்டாளர்களுக்கு முழுக் கிரைய விலையிலோ அல்லது 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையிலோ தொழிற் கூடங்கள் - தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி