Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 11, 2016

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க கல்விக்குழு அமைக்க வேண்டும்: மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

தேசிய கல்விக்கொள்கையை உருவாக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கல்விக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் நிர்வாகிகள் ஜி.சாந்தி, டி.ராமஜெயம், பி.ஜெகன், எம்.ரேவதி உள்ளிட்டோர் கோட்டையில் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. 1968-ல் டி.என்.கோத்தாரி தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட குழு கல்விக் கொள்கையை உருவாக்கியது. அதன்பிறது 1986-ல் வெளியான கல்விக் கொள்கையில் 1992-ல் சில திருத்தங்களுடன் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையை தயாரித்த டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் தலைமையிலான ஐவர் குழுவில் 4 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள், ஒருவர் மட்டுமே கல்வியாளர்.புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட்டு அதன் மீது கருத்துக்கூற 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அவரவர் தங்கள் தாய்மொழியில் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

புதிய கல்விக்கொள்கையை உருவாக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகள், பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய கல்விக்குழு அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதுதொடர்பாக தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி