Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 5, 2016

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய குழு தலைவர் பணியிடத்தை நிரப்பக்கோரி வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு.

தமிழகத்தில் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பணியிடத்தை நிரப்பக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்விச் செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக 2012-ல் நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சிங்காரவேலு 2015 டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் இதுவரை நிர் ணயிக்கப்படவில்லை.தமிழகத்தில் 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்வாகமே வசூலித்து வருகிறது. இதனால் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவரைஉடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங்கிய அமர்வு நேற்று விசா ரித்தது. தமிழக பள்ளிக் கல்வி முதன்மை செயலர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் வரும் 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி