Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 14, 2016

தமிழில் பெயர் 'இனிஷியல்'

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தமிழில் பெயர் எழுதவேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபத்துரை என்ற தமிழ் ஆர்வலர், பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிலர், தங்கள் பெயரை ஆங்கிலத்திலும், சிலர் முன்னெழுத்தான, 'இனிஷியலை' ஆங்கிலத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை அனைவரும்,தங்கள் பெயரை தமிழில் எழுதுவதுடன், இனிஷியலையும், தமிழிலேயே எழுத வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார். தமிழில் எழுதாதது, அரசு விதிகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. முதலில் ஜெபராஜ் என்பதிலேயே தமிழ் இல்லை.இப்படிப்பட்ட அபத்தமான ஆணைகளால் தமிழ் வளர்ந்துவிடும் என்பதே தவறான புரிதல் தான்.இது போன்ற ஆர்வக்கோளாறுகள் தான் தமிழை இத்தலைமுறையினர் ஏளனமாக எண்ணக்காரணம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி