sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Aug 22, 2016

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை

வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் பார்வதிநாதன் முன்னிலை வகித்தார். இதில், தேசிய பயிற்சியாளர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு, அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில், 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இதில், முதன்மை நிர்வாக அலுவலர் சி.நாகராஜன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சந்திரா கைலாசம், மெட்ரிக். பள்ளி முதல்வர் பாவைகார்த்திகேயன், மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், பயிற்சியாளர்கள்ரகுநாதன், என்.டி.சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி