Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 17, 2016

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

3 comments :

  1. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு பணிநியமனம் நடைபெற்றது.ஆனால் 201 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.201 பணியிடங்களுக்கான‌ தேர்வுப்பட்டியல் வெளியிடுவதின் தாமதம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்டபோது 'ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேளுங்கள்' என்று தெரிவிக்கப்பட்டது.ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேட்டால் 'ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேளுங்கள்'என்று தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்தின் இந்த பதில் மற்றும் தாமதம் ஆதி திராவிடர் இன மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னேற்ற வளர்ச்சியினை தடை செய்யும் விதமாக உள்ளது. 3 ஆண்டுகளாக தேர்வு பட்டியலை எதிர் பார்த்து வேறு எந்த பணிகளுக்கும் செல்ல முடியாத சூழலில் வேலை இன்றி வறுமையில் தவித்து வருகிறேன்.ஆதி திராவிடர் இனத்தவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி செய்து வரும் தாங்கள்,தேர்வர்கள் மீது இரக்கமும் கருணையும் கொண்டு மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் உடன‌டியாக வெளியிடவும், மிக விரைவில் பணி நியமன ஆணை வழங்க‌வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. TRB SAID......... 1 month before selected 201 list given to adw directorate office by trb.

    ADW DIROCTORATE SAID........... with in august end counsling letter will be send to selected canditates.so wait just 1 month.

    mr.rajmohan sir neenga select agittingla nu theinjikka venumaa???????????

    go to adw director office seppakkam chennai.

    anga list irukku. neenga poi kettu list parunga.

    advance best wishes for u.(if u selected)

    ReplyDelete
  3. what about delhi sc case status??????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி