Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 6, 2016

மாநில ஜூனியர் தடகள போட்டி : மூன்று வீரர்கள் புதிய சாதனை.

கடலுாரில் நேற்று துவங்கிய, மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில், மூன்று வீரர்கள் புதிய சாதனை நிகழ்த்தினர். தமிழ்நாடு தடகள கழகம் சார்பில், 31வது மாநில அளவிலான தடகள போட்டி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.
மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டியின் முதல் நாளான நேற்று, 10 ஆயிரம் மீட்டர் நடை போட்டியில், 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவர் செர்வின் 50 நிமிடம் 55.4 விநாடிகளில், துாரத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.இதேபோட்டியில் கோவை சந்தீப், காவியரசன் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்தனர். நீளம் தாண்டுதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முகமது ஆசிப், 1.80 மீட்டர் துாரம் தாண்டி, புதிய சாதனை படைத்தார். இப்போட்டியில் ஈரோடு பிரபு, கடலுார் முருகன் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

வட்டு எறிதலில், 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரவருண் 56.05 மீட்டர்துாரத்திற்கு எறிந்து, புதிய சாதனை புரிந்துள்ளார். இப்போட்டியில் காஞ்சிபுரம் சூர்யா, திருச்சி தீபன்குமார் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி