Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 18, 2016

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்தார்.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சரித்திர சாதனையையும் படைத்தார் ஹரியாணாவைச் சேர்ந்த சாக்‌ஷி.

காலிறுதியில் சாக்‌ஷி மாலிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தினார்.இந்தச் சிலிர்ப்பூட்டும் ஆட்டத்தில், முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்தார். மீண்டுஎழுந்த அவர் பின்னர் தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்ஆட்டநேரம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் எடுத்த மூன்று புள்ளிகளே 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வெல்ல காரணமாக இருந்தது.முன்னதாக, மங்கோலிய வீராங்கனை ஆர்கோன் என்பவரை 12-3 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தியதன் மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப்போட்டியில் அவர் விளையாடிய விதமே எதிர்பார்ப்புகளை எகிறவைத்தது.

ஆரம்ப சுற்றுகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி, காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் வெலேரியா கோப்லோவாவிடம் 9-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், வெண்கலத்துக்கான சுற்றுகளில் அசத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.ரியோ ஒலிம்பிக் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவின் பதக்க தாகத்தை சாக்‌ஷி தீர்த்து வைத்துள்ளது மகிழ்வுக்குரியது.சாக்‌ஷி மாலிக்: ஹரியாணாவில் இருந்து ரியோ வரை:ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் புதன்கிழமை ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.அதேபோல், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக, யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்‌ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

17 comments :

  1. Congrats.Namakkal Physical education teachers.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் இந்தியரின் ஒவ்வொருவரின் வெற்றியாக சகோதரியே

    ReplyDelete
  3. வாழ்த்துகள் இந்தியரின் ஒவ்வொருவரின் வெற்றியாக சகோதரியே

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Friends caution for your future don't join in SMD Hindu Aided School in park town chennai. This management is very worst. They r running the School in single small dense building. Also it not properly regagnised because of required space. Also Starting they ask small amount after joining they will ask extra money. Be careful. Avoid that school. Also they will ask partial amount for every arreier amount. You have to work with highly frustrated situation upto end of your service period. After finishing your service you will not get your settlement smoothly they will ask partial amount your settlement amount also. So friends better avoid that school.

    ReplyDelete
  6. Friends caution for your future don't join in SMD Hindu Aided School in park town chennai. This management is very worst. They r running the School in single small dense building. Also it not properly regagnised because of required space. Also Starting they ask small amount after joining they will ask extra money. Be careful. Avoid that school. Also they will ask partial amount for every arreier amount. You have to work with highly frustrated situation upto end of your service period. After finishing your service you will not get your settlement smoothly they will ask partial amount your settlement amount also. So friends better avoid that school.

    ReplyDelete
  7. We are very proud because of shskshi

    ReplyDelete
  8. We are very proud because of shskshi

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி