Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 13, 2016

புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.

பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.
இதன்மூலம் இதர ஆசிரியர்களும் இத்தகைய முறையைப் பின்பற்றி எளிமையான முறையில் பாடங்களைக் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறையில், மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் முறையைவிட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த புதிய முயற்சிகள் பலவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வீடியோவாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இதில் மிகவும் வித்தியாசமான முறையில் மற்றும் புதுமையாகக் கற்பித்த 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளை வீடியோவாக எடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது . இதில் 100 ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் முறையை ஆவணப் படம் போல மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணையதளத்தில் வீடி யோவாக பதிவேற்றம் செய்து வருகிறது. இதில் ஈரோடு மாவட் டத்தைச் சேர்ந்த 3 ஆசிரியர்களின் கற்பித்தல் முறை குறித்த வீடியோ இடம்பெற்றுள்ளது. ஈரோடுமாவட்டம் மொடக் குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்), பவானி ஒன்றியம் சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை எம்.சுதா (பழைய செயல்வழிக் கற்றல் அட்டை மூலம் வகுப்பறையை அழகுபடுத்துதல் மற்றும் கற்றல் பயிற்சியை மேம் படுத்துதல்), பவானி ஒன்றியத்தில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசி ரியை வாசுகி (வாழ்க்கைக் கல் வியை அனுபவ பயிற்சி மூலம் கற்பித்து மாணவர்களை உணரச் செய்தல்) ஆகியோரின் கல்வி கற் பித்தல் முறை குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோவால் மற்ற ஆசிரியர்களும் இந்த வீடியோவைப் பார்த்து புதுமையாகவும்எளிமையாகவும் கற்பிப்பார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த கற்பித்தல் முறையை அங்கீகரித்து இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரும் கல்வியாண்டி லும் தொடரும் என்றும் இதன் மூலம் புதிய முறையில் வித்தியாசமாக கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமைகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் எஸ்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.

6 comments :

  1. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099 study materials available. SCERT DIET English & Education study materials available contact 9688539099

    ReplyDelete
  2. Tiruvarur district BT surplus ....vacant status therinja post panunga sir..........

    ReplyDelete
  3. Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact9688539099 study materials available. SCERT DIET English & Education study materials available contact 9688539099

    ReplyDelete
  4. அனைத்து ஆசிரியர்கள் கவனத்திற்கு
    அனைவரின் வேண்டுகோளிற்கினங்க எதிர் வரும் GROUP II தேர்வு முடிந்தவுடன் ஆகஸ்ட் மாதம் 22,23,24 மூன்று நாட்களில் அனுமதி கிடைக்கும் நாளில் நமது அடுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன்

    நன்றி

    மு.ஜெயகவிதாபாரதி.

    ReplyDelete
  5. Adw லிஸ்ட் பற்றி தேவையில்லாத கருத்துக்கள் பறிமாறப்பட்டு வருவது ஆரோக்கியமானதாக இல்லை தோழர்களே. லிஸ்ட் வரவில்லை என்றால் 1 ம் தேதி போராட்டம் செய்ய வேண்டும் என பேசிய நண்பர்களே.அறிவித்த படி போராட்டம் செய்தீர்களா?

    கமெண்ட் என்ற பெயரில் எதையாவது பதிவிட வேண்டாம். வெற்றிக்காக வீதியில் இறங்கி போராடிய பலர் அழுது புலம்பி கொண்டிருக்கையில், நீங்கள் தான் எல்லாம் சாதித்தது போல் வீர வசனம் பேச வேண்டாம். நீங்களாக ஒரு கணக்கு போட்டு மார்க் பதிவிட வேண்டாம். இதையே பலர் உயிராக நினைக்கையில் அவர்களை கொல்வது போல உள்ளது உங்கள் செயல். விரைவில் நல்ல தகவல்வரும். அப்போது உறுதி செய்து கொள்ளுங்கள். தேர்வாக போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மீண்டும் சொல்கிறேன் வெயிட்டேஜ் பற்றிய உறுதியற்ற, நம்பகமில்லாத வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் பதிவிடவும்.

    இப்படிக்கு சந்திர மோகன்.

    ReplyDelete
  6. Adw லிஸ்ட் பற்றி தேவையில்லாத கருத்துக்கள் பறிமாறப்பட்டு வருவது ஆரோக்கியமானதாக இல்லை தோழர்களே. லிஸ்ட் வரவில்லை என்றால் 1 ம் தேதி போராட்டம் செய்ய வேண்டும் என பேசிய நண்பர்களே.அறிவித்த படி போராட்டம் செய்தீர்களா?

    கமெண்ட் என்ற பெயரில் எதையாவது பதிவிட வேண்டாம். வெற்றிக்காக வீதியில் இறங்கி போராடிய பலர் அழுது புலம்பி கொண்டிருக்கையில், நீங்கள் தான் எல்லாம் சாதித்தது போல் வீர வசனம் பேச வேண்டாம். நீங்களாக ஒரு கணக்கு போட்டு மார்க் பதிவிட வேண்டாம். இதையே பலர் உயிராக நினைக்கையில் அவர்களை கொல்வது போல உள்ளது உங்கள் செயல். விரைவில் நல்ல தகவல்வரும். அப்போது உறுதி செய்து கொள்ளுங்கள். தேர்வாக போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மீண்டும் சொல்கிறேன் வெயிட்டேஜ் பற்றிய உறுதியற்ற, நம்பகமில்லாத வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் பதிவிடவும்.

    இப்படிக்கு சந்திர மோகன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி