Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 14, 2016

ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் பிஎஸ்என்எல். அறிவிப்பு

தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் லேண்ட்லைன் வாயிலாக செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

லேன்ட்லைன் வாயிலாக மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்குஇரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது. தற்போது மேலும் வாடிக்கை யாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும். மேலும் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட்லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் இணைப்பு (இன்ஸ்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் மற்ற வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி