Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 23, 2016

பதவி உயர்வு விதியை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர் வழக்கு.

சென்னை:பட்டதாரி ஆசிரியர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க, பள்ளிக் கல்வித்துறை விதித்த நிபந்தனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
’பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது’ என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியை வளர்மதி தாக்கல் செய்த மனு: பள்ளிக் கல்வித்துறை, 2016 ஜூலையில், ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது; அதில்,’பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை உதவி ஆசிரியர்களாக நியமிப்பதற்கு பரிசீலிக்கப்படுவர்; முதுநிலை உதவி ஆசிரியர் பணியில், ஐந்து ஆண்டுகள் முடித்த பின், மீண்டும் பட்டதாரி ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினால் தான், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வர முடியும்’ என, கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, சட்ட விரோதமானது; இதை, ரத்து செய்ய வேண்டும். முதுநிலை உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சிறப்பு விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இரண்டு வழிகளில் பதவி உயர்வு உள்ளது; ஒன்று, முதுநிலை உதவி ஆசிரியராக வருவது; மற்றொன்று, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வருவது.

எனவே, முதுநிலை உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள்,தலைமை ஆசிரியர் பதவியை பெற மீண்டும் பட்டதாரி ஆசிரியராகபணியாற்ற வேண்டும் என்ற, நிபந்தனை விதிப்பது சரியல்ல; இதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி பி.ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு நடவடிக்கைகள், இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி