Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 20, 2016

கணவர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனைவி தர்னா

கணவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் சரவணன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் விடைகளைப் பார்த்து எழுத அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் புகார் உண்மை என தெரியவந்தது. எனவே, சரவணனை வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல் செய்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி இலக்கியா தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். கல்வித் துறைஅலுவலர்கள் மற்றும் சூலக்கரை போலீஸார் அவரிடம் சமரசம் செய்து முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிடுமாறு கூறினர்.இதுகுறித்து ஆசிரியர் சரவணன் கூறியதாவது:பள்ளியில் இருக்கும் சில ஆசிரியர்களின் தூண்டுதலின்பேரில் என்னை இடமாற்றம் செய்துள்ளனர். மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.அதில், நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தற்போது இடமாறுதல் செய்துள்ளனர். நரிக்குடி பள்ளியிலிருந்து ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் நான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்என்றார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறியதாவது:சரவணன் மீது சக ஆசிரியர்கள் மட்டுமல்லாது கிராம மக்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையிலே அவரை இடமாறுதல் செய்தோம். இடமாறுதல் கலந்தாய்வில் அவர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி