Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 10, 2016

கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு.

சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில்,
முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.நடப்பாண்டு, தமிழகத்தில், 1.13 லட்சம் பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.விரும்பும் மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஜூலை, 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி