Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 9, 2016

'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வு பின்னணி

தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு என்றாலே ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும்.
இதற்கு காரணம் தகுதி, சீனியாரிட்டி இருந்தாலும் விரும்பிய இடங்களை பெற பல லட்சம் ரூபாய்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கலந்தாய்வு என்றாலே காலிப்பணியிடங்கள் மறைப்பு, திரைமறைவு 'பேரம்', ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் என புகார்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது.

புகார் எழவில்லை:

ஆனால் இந்தாண்டு ஆக.,3ல் துவங்கிய கலந்தாய்வில் தற்போது வரை தொடக்க கல்வியில் 200 ஏ.இ.இ.ஓ.,க்கள் மாறுதல், 80க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு, நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் என 12 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் 499 பேருக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வும், 325 பேருக்கு மாறுதலும் கிடைத்துள்ளன. ஆனால் பெரிய அளவிலான புகார்களோ, சர்ச்சையோ எழவில்லை.

பின்னணி என்ன:

இதற்குகாரணம் அரசியல்வாதி சிபாரிசு இல்லை; ஒரு காலி இடத்தை கூட அதிகாரிகள் மறைக்கவில்லை என்பது தான்.மாறுதல் கலந்தாய்வு என்றாலே கல்வி அதிகாரிகளை விமர்சிக்கும் ஆசிரியர் சங்கங்கள் இந்தாண்டு அதிகாரிகளை புகழ்ந்து தள்ளுகின்றன.

ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் பின்னணி குறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முக்கிய காரணம் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியை அதிகபலம் கொண்ட தி.மு.க.,வும் கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் 'பேரம்' மற்றும் காலி இடங்கள் மறைப்பு என்றால் எதிர்கட்சியினர் பெரும் பிரச்னையாக்கி முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவர். இதனால் தான் அரசியல்வாதிகளும், கல்வி அதிகாரிகளும் தங்கள் 'கைகளை கட்டி' வைத்துக் கொண்டனர், என்றார்.உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக தலைவர் சாமிசத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன், மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது: ஒரு காலியிடம் கூட மறைக்கப்படாமல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படுகிறது. ஒரு பைசா செலவில்லாமல் விரும்பிய இடங்கள் ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் அமைச்சர் பெஞ்சமின், இயக்குனர் கண்ணப்பனுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்," என்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி