Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 24, 2016

TET நிபந்தனை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.

2016 ஜுலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் நடந்து கொண்டுள்ள தமிழக சட்டப் பேரவையில் TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நீதி மன்ற வழக்குகள் காரணமாக தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டினர்.

ஆயினும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில் நடந்து கொண்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஒரு நல்ல விடியல் கிடைக்கும் என காத்துக் கொண்டு இருக்கின்றனர்.காரணம் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்வெளிவந்த நாள் இதே ஆகஸ்டு 23 (2010)தமிழகத்தில் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு இந்தவகை ஆசிரியர்களின் நிலையும் பணியும்....???( கேள்விக்குறி )என்பதை கடந்த பல நாட்களாக பல ஊடகங்கள் நினைவுபடுத்திவருகின்றன.23/08/2010 க்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்கள் இன்றும் ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி நியாயமாக கிடைக்க வேண்டிய பல உரிமைகள்மறுக்கப்பட்ட நிலையில் இன்றுவரை பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...

ஒரு சில ஆசிரியர்களுக்கு...
* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்புகள் இல்லை.

₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கருணை உள்ளத்தோடு, இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும் நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கை முடிவில் மறு பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300 பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து, ஒரு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் தனிப் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் சுமார் ஐநூறு ஆசிரியர்கள் மனு கொடுத்து இருந்தனர்.முதன்மை அமைச்சர்களின் மேலான கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.2016 ஜுலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் நடக்கும் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் கல்வித் துறை சம்மந்தமான அறிவிப்புகளில் இந்த பணியில் உள்ள நிபந்தனை ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு தந்து அரசாணை வெளிவரும் என எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்த சுமார் மூவாயிரம் ஆசிரியர்களுக்கும் காத்து கொண்டு உள்ளனர்.

தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை 181 ன் அடிப்படையில் எதிர் வரும் நவம்பர் 15 (2016) அன்றையதினத்திற்கு முன்பு இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின்பிரச்சினைகளுக்கு தீர்வாக  TET லிருந்து பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்தால் சுமார் 3000 ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையை வைக்கின்றனர்.

இந்த சட்ட மன்ற கூட்டத்தில் நல்ல தீர்வினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் இவ்வகை TET நிபந்தனை ஆசிரியர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி முழுமையான மன நிம்மதியுடன் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடாடி மகிழ்வர்.

17 comments :

  1. Secondary grade teacherum erukum


    ReplyDelete
    Replies
    1. பெயர் RAMU V

      கோரிக்கை எண் 2016/890866/UR

      கோரிக்கைத் தேதி 18/08/2016

      முகவரி 147 R.K STREET ULUNDURPET VILLUPURAM TAMILNADU .


      கோரிக்கை

      மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு பணிநியமனம் நடைபெற்றது.ஆனால் 201 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.201 பணியிடங்களுக்கான‌ தேர்வுப்பட்டியல் வெளியிடுவதின் தாமதம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்டபோது ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்திடம் கேட்டால் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரகத்தின் இந்த பதில் மற்றும் தாமதம் ஆதி திராவிடர் இன மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னேற்ற வளர்ச்சியினை தடை செய்யும் விதமாக உள்ளது. 3 ஆண்டுகளாக தேர்வு பட்டியலை எதிர் பார்த்து வேறு எந்த பணிகளுக்கும் செல்ல முடியாத சூழலில் வேலை இன்றி தவித்து வருகிறேன்.ஆதி திராவிடர் இனத்தவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி செய்து வரும் தாங்கள்,தேர்வர்கள் மீது இரக்கமும் கருணையும் கொண்டு மீதமுள்ள 201 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் உடன‌டியாக வெளியிடவும், மிக விரைவில் பணி நியமன ஆணை வழங்க‌வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      கோரிக்கை வகை EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

      கோரிக்கை நிலவரம் Forwarded to the concerned officer for necessary action


      தொடர்புடைய அலுவலர்-SCHOOL EDUCATION -SECY,TEACH.REC.MENTBOARD

      Delete
  2. Secondary grade teacherum erukum


    ReplyDelete
  3. Frnds any news abt ADWS remaining posting

    ReplyDelete
  4. Replies
    1. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான மீதி 201 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் செப்டம்பர் 2 வது வாரம் வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்த நண்பர் விஜயகுமார் சார் அவருக்கு நன்றி! நன்றி! நன்றி!

      Delete
  5. விலக்கு அளித்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  6. Friends any news lab assistant result.anybody plsvhelp me.

    ReplyDelete
  7. Adw 30% list eppo viduvanga.yen late pandranga ayyo onnume puriyala.lab assistant exam nadanthu one year and three months aachu.innum result vidula super goverment.

    ReplyDelete
  8. Tet Case eppa mudiyum? mika mika kodumaiyana weitage system cancel pannuvangala? Next new teacher post eppo? Next tet exam eppo? Lab assistant result eppo? adw Remaining list eppo? Pg trb eppo?

    ReplyDelete
  9. Tet Case eppa mudiyum? mika mika kodumaiyana weitage system cancel pannuvangala? Next new teacher post eppo? Next tet exam eppo? Lab assistant result eppo? adw Remaining list eppo? Pg trb eppo?

    ReplyDelete
  10. M.SIMON BABU BT MATHS COMMUNITY BC TET MARK 91 CELL 9786236985

    ReplyDelete
  11. Aided school science vacancies...
    1. Bc female -2 vacancies
    2. SC male/female -1 vacancy
    Tet above 90
    Contact 8883229272

    ReplyDelete
  12. Aided school science vacancies...
    1. Bc female -2 vacancies
    2. SC male/female -1 vacancy
    Tet above 90
    Contact 8883229272

    ReplyDelete
  13. Adw 30% list eppo viduvanga.yen late pandranga ayyo onnume puriyala.lab assistant exam nadanthu one year and three months aachu.innum result vidula super goverment.

    ReplyDelete
  14. Friends any news lab assistant result.anybody plsvhelp me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி