Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 13, 2016

TNPSC:குரூப்-4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை.

டிஎன்பிஎஸ்சி. குரூப்-4 தேர்வுக்கு 10-ஆம்வகுப்பு படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர்.
நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொதுப்பிரிவினராக இருந்தால் 30 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந்தால் 32 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருந்தால் 35 வயதுக்குள்ளும் இருந்தால் மட்டுமேவிண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்டுள்ளகோரிக்கையில்,

குரூப்-4 தேர்வுக்கான தகுதி 10 ஆம் வகுப்பு என்ற நிலையில் இத்தேர்வை ஏராளமானோர்எழுத விரும்புகின்றனர். ஆனால் வயது கட்டுப்பாட்டால் தேர்வெழுத முடியாத நிலை உள்ளது.எனவே அனைவரும் பயன்பெறும் வகையில் வயது வரம்பை 40 வரை உயர்த்தி ஆணையிட்டால் 10 ஆம் வகுப்பு முடித்து 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி