Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 20, 2016

TET தேர்வு நடக்காத பின்னணி என்ன? மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்!

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது.
2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம்பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்திவிரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்:

23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.

சிக்கலுக்கு தீர்வு என்ன:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணைபிறப்பிக்க வேண்டும், என்றார்.

34 comments :

 1. Replies
  1. இவனுகளே வாண்ட்டடா ஆப்பு தான் வேணும்னு ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பாக .

   அப்புறமா யம்மா யம்மா னு பிச்சகாரனா மாறிடுவானுக .

   உங்கள் ஆள்காட்டி விரலை வெட்டி குப்பை ல போடுங்கடா கவரிமான் ராஜாக்களா ...

   இதுல யம்மா வந்தா நல்லா " செய்வாக " னு நாலு அடிமை பயலுக வேற ஜால்லரா போடுறானுக .

   இப்ப நல்லா கிழியுதா டா கூஊஊஊஊஊன் அடிமை பசங்களா

   Delete
 2. Sir Any news abt ADWS 201 remaining vacancy . how much weightage marks

  ReplyDelete
  Replies
  1. 201 adw sgt list will be 30 august before.

   cut off may be 68.80 to 68.82

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. trb said that "we sent list to adw office.go and ask to adw office".   adw directorate office said that "we are not responsible for publish the list in trb website.go and ask to trb"

   now what we do????????????????

   Delete
  4. adw princepal seceretary 044 25671848

   adw director office 044 28289855

   trb 044 - 28272455 , 7373008144 , 7373008134

   Delete
  5. hello chennai friends please go to adi dravidar welfare directorate office and ask ....

   WHEN WILL 201 ADW SGT LIST WILL PUBLISH ????

   AND EPPO COUNSLING LETTER ANUPPUVINGA???

   endru kettu kalvi seithi website il news update pannunga pleasesssss

   Delete
 3. கல்வித் துறை அதிகாரிகள் அரசாணைகளை முறையாக தெரிந்து கொள்ளாமல் செய்த சிறு சிறு பிழைகள் தற்போது பெரிதாக மாற்றம் அடைந்து உள்ளன. பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் (3000+) மற்றும் பணியில் இல்லாத பல லட்சம் TETமுடித்த முடிக்காத ஆசிரியர்கள் வாழ்க்கை பந்தாட்டம்.
  அரசின் கவனத்தில் கொண்டு செல்ல எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வி...


  அம்மா... !?

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீங்க எப்பொழுதுதான் நமக்கு விடிவு கிடைக்கும்

   Delete
  2. வழக்கம் போல இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ரோட்டுல சூப்பிட்டு தான் திரியனும்
   விரல சொன்னேன்

   Delete
 4. TET 90++ஆசிரிய நண்பர்களே ! இன்று 2.00 pm உண்ணாவிரத தேதி அறிவிக்கப்படும்.ஆசிரிய நண்பர்களே ! இந்த போராட்டம் நாம் அனைவருக்கான போராட்டம் .அனைவரும் பணிவாய்ப்பை பெற்றே தீரவேண்டும். நம்முடைய பாதிப்பை அரசுக்கு நியமான முறையில் தெரிவிக்க அனைவரும் வரவேண்டும். நம் முயற்சி வெற்றிபெறும் .அனைத்து ஆசிரியர்களும் இந்த தகவலை தகவல் தெரியாத ஆசிரியர்களுடன் பகிந்து கொள்ளவும்..நன்றி...

  ReplyDelete
 5. TET 90++ ஆசிரிய நண்பர்களே ! இன்று 2.00 pm உண்ணாவிரத தேதி அறிவிக்கப்படும்.ஆசிரிய நண்பர்களே ! இந்த போராட்டம் நாம் அனைவருக்கான போராட்டம் .அனைவரும் பணிவாய்ப்பை பெற்றே தீரவேண்டும். நம்முடைய பாதிப்பை அரசுக்கு நியமான முறையில் தெரிவிக்க அனைவரும் வரவேண்டும். நம் முயற்சி வெற்றிபெறும் .அனைத்து ஆசிரியர்களும் இந்த தகவலை தகவல் தெரியாத ஆசிரியர்களுடன் பகிந்து கொள்ளவும்..நன்றி...

  ReplyDelete
 6. venkateshraj sir unga mopile number kodunga

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 7. அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக முக்கிய அறிவிப்பு
  2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER I & PAPER II 90+ தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு

  மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்
  நாள் : 26.08.2016

  இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு

  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....


  மாபெரும் உண்ணா விரத கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 26 ந்தேதி நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது… .


  நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக போகிறோம்… .


  அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக
  தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலும் இந்த தேதியில் அனுமதி பெறப்பட்டுள்ளது.. .


  எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்… .


  நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை நம் வருகையின் மூலமே அரசுக்கு உணர்த்த முடியும்… .


  நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…


  மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...அதை நாம் அனைவரும்
  தவறாமல் பயன் படுத்திக்கொள்வோம்…


  அனுமதி கடிதம் 25 தேதி மாலை வெளியிடப்படும்


  நன்றி

  மு .ஜெயகவிதாபாரதி

  ReplyDelete
  Replies
  1. செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கும்...

   இது என்னுடைய தனிப்பட்ட கருத்து...

   Delete
  2. Today evening 6 pm I published TET SUPREME COURT CASE COURT ORDER....

   இப்போது போராட்டம் தேவையா ? இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்...

   Delete
  3. Let us see how you can publish a court order of an in finished case.

   Delete
  4. Let us see how you can publish a court order of an in finished case.

   Delete
  5. Now time is 7.20. Wr is ur court order. Pls publish.

   Delete
  6. ஒன்றும் அப்டேட் செய்யப்படவில்லை நண்பரே ...

   வெங்கட ராஜ் @ ஜெயகவிதா பாரதி .
   இன்னமும் +90 க்கு மட்டும் வேலை வரும் என்ற உங்கள் எண்ணத்தை என்னத்த சொல்ல ,,
   கானல் நீரை பருகலாம் ,
   வாருங்கள் என்றால் யார் வருவாங்க உன் பின்னால் ??
   இந்த வெய்டேஜ் முறையை கொண்டு வந்த உனக்கே பல்பு குடுத்துடானுகளா ???

   so saaaaaddddd

   Delete
 8. 82 TO 89 TET PASSED PEOPLE :- in 7 years eligibilities, 3 years gone. balance only 4 years availed. it is not possible to get posting. we passed in 2013. we have seniority. we also to be get posting before further TET exam. please reply or call to 9994549014 any body in 82 to 89 people.

  ReplyDelete
 9. அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு


  மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்

  நாள் : 26.08.2016

  இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு

  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்...

  .வேலை வேண்டி செய்யப்படும் உண்ணா விரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது .

  அரசு நினைத்தால் மட்டுமே நமக்கு வேலை என்பதை இந்த தருணத்தில் நாம் நினைத்து செயல்படுவோம் .

  இன்னும் இருப்பது நான்கு வருடங்களே.

  இந்த காலத்திற்குள் வேலை பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியுடனும் , அதே வேளையில் நேர்மறையாகவும் எண்ணி செயல்படுவோம்.

  எந்த ஒரு எதிர்மறையான கருத்துடனும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் .

  இந்த முயற்சி நமக்கு ஒரு நல்ல பதிலை அரசிடமிருந்து பெற்று தரும் என்று முழுமையாக நம்புவோம்.

  அதற்கு ஒவ்வொருவரின் உழைப்பு ( வருகை ) இருந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குவோம்.

  இந்த தகவலை அனைவரிடமும் பகிரவும்.

  நன்றி

  ReplyDelete
 10. அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக முக்கிய அறிவிப்பு
  2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER I & PAPER II 90+ தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு

  மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்
  நாள் : 26.08.2016

  இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு

  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....


  மாபெரும் உண்ணா விரத கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 26 ந்தேதி நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது… .


  நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக போகிறோம்… .


  அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக
  தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலும் இந்த தேதியில் அனுமதி பெறப்பட்டுள்ளது.. .


  எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்… .


  நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை நம் வருகையின் மூலமே அரசுக்கு உணர்த்த முடியும்… .


  நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…


  மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...அதை நாம் அனைவரும்
  தவறாமல் பயன் படுத்திக்கொள்வோம்…


  அனுமதி கடிதம் 25 தேதி மாலை வெளியிடப்படும்


  நன்றி

  ReplyDelete
 11. velga porattam uyarattum nam nambikai

  ReplyDelete
 12. velga porattam uyarattum nam nambikai

  ReplyDelete
 13. hello chennai friends please go to adi dravidar welfare directorate office and ask ....

  WHEN WILL 201 ADW SGT LIST WILL PUBLISH ????

  AND EPPO COUNSLING LETTER ANUPPUVINGA???

  endru kettu kalvi seithi website il news update pannunga pleasesssss

  ReplyDelete
 14. rajalingam sir time 8.10pm eppa than ubdate pannuvinga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி