Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Aug 1, 2016

TNTET :தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளியில் கடந்த 13.12.2011 அன்று பட்டதாரி ஆசிரியையாக தூத்துக்குடி அரசடி பனையூரைச் சேர்ந்த பூமணி என்பவர் நியமிக்கப்பட்டார்.இவரது நியமனத்தை அங்கீகரிக்கும்படி பள்ளி நிர்வாகம் தூத்துக்குடி கல்வி மாவட்ட அதிகாரிக்கு மனு அனுப்பியது.ஆசிரியர் தகுதித்தேர்வில் பூமணி தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவரது நியமனத்தை அங்கீகரிக்க மறுத்து 5.6.2014 அன்று கல்வி அதிகாரி உத்தரவிட்டார். ஐகோர்ட்டில் மனு சிறுபான்மை பள்ளியில் நியமிக்கப்படும்ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து விட்டு எனது நியமனத்தை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று பூமணி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இதேபோன்று 30-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் பூமணி சார்பில் வக்கீல் டி.ஏ.எபனேசர் ஆஜராகி வாதாடினார்.

சம்பளம் வழங்க வேண்டும்

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு மனு செய்துள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ளது. ஆனால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, மனுதாரருக்கும், மனு தாக்கல் செய்துள்ள மற்றவர்களுக்கும் தமிழக அரசு 4 வாரத்துக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அவர்களை வேலையில் இருந்து நிறுத்தக்கூடாது.

இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுவின் தீர்ப்பை பொறுத்து இருக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

12 comments :

  1. 15.11.2011 முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா சொல்லுங்க

    ReplyDelete
  2. TET என்பது போட்டித் தேர்வு அல்ல... தகுதித் தேர்வு தான்.
    கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் TET லிருந்து விலக்கு கிடைக்கும்... சற்றே பொறுங்கள். உங்கள் கண்ணீருக்கு நவம்பர் 15 க்குள் தீர்வு கிட்டும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. தகுதி தேர்வு என்பது ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிக்க பயன் படுத்திய ஒரு ஆயுதம் மட்டும் தான் இந்த உண்மையை மறைத்து ஆட்சியாளர்களும் ஒரு சில பார்பன ஊடகங்களும் தகுதியான ஆசிரியர் வேண்டும் என்றால் தேர்வு வேண்டும் என்று ஒரு மாயையை உருவாக்கி வந்தன மக்களை ஏமாற்ற இது ஒரு தந்திரம் இந்த மாயை விலகும் நேரம் வந்து விட்டது என்னமோ தகுதி தேர்வில் தேர்வான ஆசிரியர்கள் வந்த பிறகு கல்விதரம் என்ன உயர்ந்தா விட்டது எல்லாம் ஏமாற்று வேலை மதிய அரசின் புதிய கல்வி கொள்கை வந்த வுடன் இந்த மாயை விலகி விடும்


    ReplyDelete
  5. Adw 30% selection list adw department a koduthu one week akutham.

    ReplyDelete
  6. ஏன் இன்னும் trb website யில் விடவில்லை?

    ReplyDelete
  7. ஏன் இன்னும் trb website யில் விடவில்லை?

    ReplyDelete
  8. ஓம் நம சிவாய‌

    ஆதி திராவிடர் நல துறை பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்(பட்டு)படவுள்ள 201 இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 26256 -26257 OF 2015

    STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRET .Vs. S. VINCENT AND ORS

    Pet. Adv. : MR. M. YOGESH KANNA Res. Adv. : G.SIVABALAMURUGAN

    Subject Category : LETTER PETITION & PIL MATTER - SLPs FILED AGAINST JUDGMENTS/ORDERS PASSED BY THE HIGH COURTS IN WRIT PETITIONS FILED AS PIL

    This Case is connected to : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    Listed 0 times earlier There are no further orders of listing

    Last updated on 06-08-2016

    Back NIC

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி