Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 29, 2016

ரயில்வே மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை : அக்.15ல் சிறப்பு சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் ரயிலில் கட்டண சலுகை பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரயில்வே ஸ்டேஷன்களில் அக்.15ல் நடக்கிறது. ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்தால் அவர்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக மதுரை கோட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கேட்டு 6,791 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை தயார் செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதை வாங்க வராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.ரயில்வே துறை சார்பில் விண்ணப்பதாரர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் அக்.15ல் நடக்கும் முகாம்களில்மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம், அன்று பெற முடியாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் ரயில்வே ஸ்டேஷன்களில் பெற்றுக் கொள்ளலாம், என ரயில்வே நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி