Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 14, 2016

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு?

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வரும், 16ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. சமீபத்தில், மாநில தேர்தல் ஆணையம், 'அக்., 24ம் தேதிக்குள், உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதன்படி, அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும்,மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், எவ்வாறு நடைபெறுகின்றன என, மாநில தேர்தல் ஆணையர், ஒவ்வொருமாவட்டமாக சென்று ஆய்வு நடத்திஉள்ளார். இப்பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் வரும், 16 முதல், விருப்ப மனு வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது; அன்று பவுர்ணமி. மேலும்,17ம் தேதி, புரட்டாசி பிறக்கிறது. எனவே, 16ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி