Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 25, 2016

2,000 ஆசிரியர் இடம் காலி மத்திய அரசு பள்ளிகளில்: தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.
இங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது.

இப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்தி அல்லது ஏதாவது ஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளிமுதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர் உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.

4 comments :

  1. தமிழ் 2014 பணிவரமுறை ஆணை இன்னும் வரவில்லை ஏன்

    ReplyDelete
  2. தமிழ் 2014 பணிவரமுறை ஆணை இன்னும் வரவில்லை ஏன்

    ReplyDelete
  3. இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்!


    நாகர்கோவில் : ``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

    ReplyDelete
  4. MPC PG TRB Coaching center ERODE (Mathematics Only)
    * New batch starts by october 3 rd week
    * Place: Tannerpandalpalayam 5 KM from Erode busstand
    * Contact: 98427-71667.,90420-71667
    * Study material available

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி