sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Sep 14, 2016

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

'அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி