Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 22, 2016

31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு.

சென்னையைத் தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, நகர்-ஊரமைப்புத் துறை ஆணையாளர் (பொறுப்பு) தர்மேந்திர பிரதாப் யாதவ், வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
கட்டட வரைபட அனுமதி தொடர்பான பரிசீலனையை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளும் வசதிகளைக் கொண்ட மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரரிடம் இருந்து கைப்பட வரையப்பட்ட கட்டிட வரைபடத்தைப் பெறும் தற்போதய நடைமுறை, இதன் மூலம் மாற்றப்படுகிறது.

எனவே கட்டட வரைபடத்தை இனிமேல்  http:www.dtcp.tn.gov.in என்ற இணையதளத்தில் காணப்படும் e-dcr என்ற மென்பொருள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, கட்டட அனுமதி கேட்பது, சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பது உட்பட மற்ற நடைமுறைகளை தற்போதுள்ள முறைப்படியே தொடரும்.கட்டட வரைபட அனுமதியை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் நடைமுறையை தவறாக அமல்படுத்தினால் அது கடுமையாக கண்காணிக்கப்படும். இந்த புதிய நடைமுறை தொடர்பாக விண்ணப்பதாரர், கட்டட அளவையாளர்கள், கட்டட நிபுணர்கள் ஆகியோருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தனது சுற்றறிக்கையில் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி