Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 22, 2016

நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை.

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவக் கல்லூரியில் 2017-ஆம் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வரும் டிசம்பர் மாதம் 1, 2- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 7-ஆம் வகுப்புப் பயிலும் அல்லது தேர்ச்சி பெற்ற 11 முதல் 13 வயதுடையவராக இருக்க வேண்டும்.

 இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை, தி கமாண்டன்ட்,ஆர்ஐஎம்சி,டேராடூன்-248003 என்ற முகவரிக்கு கட்டணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.பொதுப் பிரிவினருக்கு ரூ.550,பட்டியல், பழங்குடியின வகுப்பினருக்கு ரூ.505 எனவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் 30-ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,சென்னை-600003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக எழுத்துத்தேர்வு நடக்கும். மேலும் விவரங்களுக்குwww.rimc.orgஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி